தெலங்கானா: கிராமத்தை தத்தெடுத்த வருமான வரித்துறை அதிகாரி

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், மகாத்மா காந்தியின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு கிராமம் ஒன்றை தத்தெடுத்துள்ளார்.


தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், மகாத்மா காந்தியின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு கிராமம் ஒன்றை தத்தெடுத்துள்ளார்.
ஆந்திரம் மற்றும் தெலங்கானா வருமான வரித்துறை அலுவலகத்தில் தலைமை இயக்குநராக பணிபுரிபவர் ஆர்.கே. பாலிவால். சங்காரெட்டி மாவட்டத்திலுள்ள கோங்குலுர் கிராமத்தை அவர் தத்தெடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை இந்த கிராமத்துக்கு கொண்டு வந்து மாதிரி கிராமமாக உருவாக்க திட்டமிட்டுள்ளேன். இக்கிராமம் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி அடைவதற்கு தேவையான முயற்சிகளை எடுப்பேன். மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யம் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, இந்த கிராமத்தை தத்தெடுத்துள்ளேன் என்றார்.
கோங்குலுர் கிராமத்தில் பிரமாண்ட சுகாதார முகாமையும் அவர் நடத்திக் காட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com