பதவியில் தொடருவார் ராகுல்: அசோக் கெலாட் நம்பிக்கை

தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்று
தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து விட்டு வரும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்,
தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து விட்டு வரும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்,


தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்று  அவரிடம் கோரிக்கை விடுத்தனர். தங்களுடைய கோரிக்கையை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்வார் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்குப் பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால், அவரது ராஜிநாமாவை கட்சியின் செயற்குழு நிராகரித்து விட்டது.   எனினும், தனது ராஜிநாமா முடிவில் ராகுல் காந்தி தொடர்ந்து பிடிவாதமாகவுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களான அசோக் கெலாட் (ராஜஸ்தான்), அமரீந்தர் சிங்(பஞ்சாப்),  கமல்நாத் (மத்தியப் பிரதேசம்), பூபேஷ் பகேல் (சத்தீஸ்கர்), நாராயணசாமி (புதுச்சேரி) ஆகியோர், தில்லியில் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர். ராகுலை சமாதானப்படுத்தும் மற்றொரு முயற்சியாக நடைபெற்ற இந்தச் சந்திப்புக்குப் பிறகு அசோக் கெலாட் , செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, இதயப்பூர்வமானதாக இருந்தது. அப்போது, எங்களது உணர்வுகளை ராகுல் காந்தியிடம் வெளிப்படுத்தினோம்.
ராகுல் காந்தியின் தலைமை தொடர வேண்டும் என்றே நாடு முழுவதும் உள்ள தொண்டர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் வலியுறுத்தினோம். எங்களுடைய கோரிக்கையை ஆக்கப்பூர்வமான வழியில் பரிசீலித்து, கட்சித் தலைவர் பதவியில் அவர் தொடர்வார் என்று நம்புகிறோம்.
மேலும், மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேர்தலின்போது, பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவும், மக்கள் பிரச்னைகளை மையமாக வைத்து அரசியல் செய்யவில்லை. அதற்கு மாறாக, தேசப்பற்று, ராணுவம், மத விவகாரங்கள் ஆகியவற்றின் பின்னால் பாஜக ஒளிந்து கொண்டு மக்களைத் தவறாக வழிநடத்தியதாக, கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர்கள் தெரிவித்தனர்.
மக்களவைத் தேர்தலின்போது, பாஜகவை எதிர்கொள்வதற்காக, ராகுல் காந்தி சரியாக தலைமையேற்று கட்சியை வழிநடத்தினார்.
நாட்டு நலன் மீதும், நாட்டு மக்கள் மீதும் எவ்வித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் ராகுல் காந்தி உள்ளார். 
தற்போதைய சூழலில்,  ராகுல் காந்தி தலைவர் பதவியில் தொடர்ந்தால் மட்டுமே, கட்சிக்குத் தேவையான வழிகாட்டுதல்களை அளிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறோம் என்று அவர் கூறினார்.
ராகுல் மறுப்பு?: இதனிடையே, முதல்வர்களின் கோரிக்கையை ராகுல் காந்தி ஏற்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது ராஜிநாமா முடிவை ஏற்கெனவே கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்து விட்டதாகவும், தனது முடிவில் பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர்களிடம் ராகுல் காந்தி தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, ராகுல் காந்தி உடனான சந்திப்பின்போது, மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவியை இவர்கள் ராஜிநாமா செய்ய முன்வந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அசோக் கெலாட்டிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேர்தலில் வெற்றி-தோல்வி சகஜம். ஆனால், கட்சித் தலைமை அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும். 
கடந்த மே மாதம் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திலேயே முதல்வர்கள் உள்ளிட்ட அனைவரும் ராஜிநாமா செய்ய முன்வந்தோம். அந்தப் பிரச்னைக்கு அப்போதே சுமுகத் தீர்வு எட்டப்பட்டு விட்டது. மேலும், கட்சியை மறுசீரமைப்பதற்கு ராகுல் காந்திக்கு அதிகாரமும் வழங்கப்பட்டது என்று அசோக் கெலாட் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com