பொருளாதார குற்றவாளிகளை விரைவில் ஒப்படைப்பதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்: வெங்கய்ய நாயுடு

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளை எளிதில் பிடிக்க நாடுகளிடையே ஒத்துழைப்பு அவசியம் என்றும்,  அவர்களை விரைவில் ஒப்படைப்பதை நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய
தில்லியில் இந்திய பட்டய கணக்கறிஞர்கள் சங்கத்தின் (ஐசிஏஐ) 70ஆவது ஆண்டு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு நினைவுப்பரிசு வழங்கும் நிர்வாகிகள்.
தில்லியில் இந்திய பட்டய கணக்கறிஞர்கள் சங்கத்தின் (ஐசிஏஐ) 70ஆவது ஆண்டு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு நினைவுப்பரிசு வழங்கும் நிர்வாகிகள்.


தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளை எளிதில் பிடிக்க நாடுகளிடையே ஒத்துழைப்பு அவசியம் என்றும்,  அவர்களை விரைவில் ஒப்படைப்பதை நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.  
இந்திய பட்டய கணக்கறிஞர்கள் சங்கத்தின் (ஐசிஏஐ) 70ஆவது ஆண்டு விழா கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது: 
நாட்டை விட்டு தப்பியோடிய பல்வேறு பொருளாதார குற்றவாளிகளை மீண்டும் நாடு திரும்பச் செய்வதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.  இதுபோன்ற, மோசடிகள் நடைபெறுவது தடுக்கப்பட வேண்டுமானால் உயர்ந்த நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
மீண்டும் இதுபோன்ற மோசடி நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க பட்டய கணக்காளர்களும் உதவி புரிய வேண்டும். மக்களிடமிருந்து கொள்ளையடித்து உருவாகும் கருப்புப் பணத்தை வைத்துக் கொள்ள எப்படி நாடுகள் அனுமதிக்கின்றன என்பது வியப்பாக உள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com