மேற்கு வங்க நிதிநிறுவன மோசடி விவகாரம்: 22 இடங்களில் சிபிஐ சோதனை

மேற்கு வங்கத்தில் நிதிநிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான நியூ லேண்ட் அக்ரோ நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு சொந்தமான  22 இடங்களில்


மேற்கு வங்கத்தில் நிதிநிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான நியூ லேண்ட் அக்ரோ நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு சொந்தமான  22 இடங்களில் சிபிஐ திடீர் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: 
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் இந்நிறுவனங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு, அதிக வட்டி தருவதாக கூறி அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் முகவர்கள் விளம்பர நிறுவனங்கள் மூலம் அறிவிக்கப்பட்டதை நம்பி ஏராளமான முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். தலா ரூ.1 கோடி வீதம் 250க்கும் மேற்பட்டவர்களால் முதலீடு செய்யப்பட்டன. முதிர்வுகாலம் கடந்தப்பிறகும் இவர்களுக்கு தொகையை திருப்பித் தராமல் ஏமாற்றினர். இதுதொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் இந்நிறுவனத்தின் மீது 2017ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. 
இந்நிலையில், இந்நிறுவனங்களின் இயக்குநர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் என 22 இடங்களில் சிபிஐ சார்பில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com