இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள்

இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் இருப்பதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சர் பிரஹலாத் படேல் தெரிவித்தார்.


இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் இருப்பதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சர் பிரஹலாத் படேல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:
தொல்லியல் துறையின் பாதுகாப்பில் அதிகபட்சமாக கர்நாடகத்தில் 242 கோயில்களும், உத்தரப் பிரதேசத்தில் 132 கோயில்களும் உள்ளன. 
அடுத்தபடியாக தமிழகத்தில் 120 கோயில்கள் உள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 96 கோயில்கள் இருக்கின்றன.
ஒட்டுமொத்தமாக 1,081 கோயில்கள் உள்ளன என்று பிரஹலாத் படேல் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com