சந்திரயான் -2 விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்க்க விருப்பமா? முந்துங்கள் 5,000 பேருக்கு மட்டுமே வாய்ப்பு

நிலவில் இறங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக ரூ.603 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி நிலவுக்குப் பயணமாகிறது.
சந்திரயான் -2 விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்க்க விருப்பமா? முந்துங்கள் 5,000 பேருக்கு மட்டுமே வாய்ப்பு

நிலவில் இறங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக ரூ.603 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி நிலவுக்குப் பயணமாகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை பொதுமக்கள் நேரடியாகப் பார்க்க ஏற்பாடு செய்வது என்று இஸ்ரோ முடிவெடுத்து அதற்கான அறிவிப்பையும் மேற்கொண்டுள்ளது.

எப்படி முன்பதிவு செய்வது?
ஜூலை 4ம்தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு மேல்தான் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்ய முடியும்.
சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டரின் இணையதளமான www.shar.gov.in இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

அந்த இணையதளத்தில் 4ம் தேதி நள்ளிரவுக்கு மேல் முன்பதிவுக்கான பிரத்யேக இணைப்புக் கொடுக்கப்படும்.

விண்கலம் ஏவப்படுவதைப் பார்க்க ஏற்பாடு செய்திருக்கும் அரங்கில் 5000 பேர் மட்டுமே இருக்க முடியும் என்பதால் 5000 பேர் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முதலில் வருவோருக்கு இந்த வாய்ப்பு கிட்டும்.

இந்த அரங்கு, விண்கலம் ஏவப்படும் ஏவுதளத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும்.

இஸ்ரோவின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுவதற்காக சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-மார்க் 3 ராக்கெட்டின் வழியாக ஏவப்படுகிறது.

சந்திரயான்-2 விண்கலத்தில் ஆர்ப்பிட்டர்(சுற்றுகலம்), லேண்டர் (தரையிறங்கி), ரோவர்(தரைசுற்றி வாகனம்) ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன. இந்த ஒருங்கிணைந்த பகுதி 1.3 டன் எடை கொண்டதாகும். விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் நினைவாக லேண்டருக்கு விக்ரம் என்றும், ரோவருக்கு பிரக்யான் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இஸ்ரோ இதுவரை செலுத்தியிராத விண்வெளிப் பயணம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த சவாலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால் செப். 6 அல்லது 7-ஆம் தேதி நிலவில் கால் பதிக்கும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com