பட்ஜெட் 2019: விலை அதிகமாகும் பொருட்களும், விலை குறையும் பொருட்களும்!

2019 - 2020ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் 2019: விலை அதிகமாகும் பொருட்களும், விலை குறையும் பொருட்களும்!

2019 - 2020ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

சில வழக்கமான விஷயங்களை இந்த பட்ஜெட்டில் மாற்றியுள்ளார் நிர்மலா சீதாராமன். வழக்கமான சிவப்பு நிற சூட்கேசுக்குப் பதிலாக சிவப்பு நிறத்திலான அழகான பையில் பொது பட்ஜெட் கோப்புகளை நிதித் துறை அமைச்சர் கொண்டு வந்தார்.

அதே போல, எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த பட்ஜெட்டில் எந்தெந்த திட்டத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்ற விவரத்தையும் நிர்மலா சீதாராமன் அறிவிக்கவில்லை.

சரி, வரி விதிப்பு, வரி விலக்கு போன்ற காரணங்களால் இனி எந்தெந்த பொருட்களின் விலை உயரும்? எந்தெந்த பொருட்களின் விலை குறையும் என்று பார்க்கலாம்.

விலை உயரும் பொருட்களை முதலில் பார்க்கலாம்..

வெற்றி மற்றும் தங்கம்
டீசல் மற்றும் பெட்ரோல்
முழுக்க முழுக்க இறக்குமதி செய்யப்படும் கார்கள்
ஸ்பிலிட் குளிர் சாதனக் கருவி
சிகரெட், ஹூக்கா, புகையிலைப் பொருட்கள்
சிசிடிவி கேமராக்கள்
இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக்
டிஜிட்டல் விடியோ டெக்கார்டர்
முந்திரி பருப்பு
இறக்குமதியாகும் புத்தகங்கள்
ஒலிப்பெருக்கி
சோப்பைத் தயாரிக்கப் பயன்படும் கச்சாப் பொருட்கள்
டைல்ஸ்
செராமிக் டைல்ஸ், சுவர் டைல்ஸ்
மார்பிள் ஸ்லாப்புகள்
பத்திரிகை காகிதங்கள், நாளிதழ்களுக்கான காகிதங்கள்
மர நாற்காலிகள்
இறக்குமதியாகும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்கள்

பட்ஜெட்டால் விலை குறையும் பொருட்களின் பட்டியல் இதோ..
கேமரா மற்றும் செல்போன் சார்ஜர்
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள்
செட்-டாப் பாக்ஸ்
இந்தியாவில் தயாரிக்கப்படாத இறக்குமதி செய்யப்படும் ராணுவ தளவாடங்கள்.

என்னடா? விலையேறும் பொருட்களின் பட்டியல் இவ்வளவு பெரிதாகவும், விலை குறையும் பொருட்களின் பட்டியல் சின்னதாகவும் இருக்கிறதே என்ற பெருமூச்செல்லாம் விடக் கூடாது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com