மத்திய அரசின் தாரக மந்திரம் இதுதான்: நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டிய திட்டம்!

அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் வீடு என்பதுதான் மத்திய அரசின் தாரக மந்திரம் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய அரசின் தாரக மந்திரம் இதுதான்: நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டிய திட்டம்!

அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் வீடு என்பதுதான் மத்திய அரசின் தாரக மந்திரம் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது,

கடந்த ஐந்து ஆண்டுகளில் 657 கிலோ மீட்டர் அளவுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

உதான் திட்டம் மூலம் சிறிய நகரங்களுக்கும் குறைந்த விலையில் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த ஆற்றுவழி போக்குவரத்து மேம்படுத்தப்படும்.

ஒரு நாடு, ஒரே மின்சார விநியோக திட்டம் கொண்டு வரப்படும்

ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்குக் குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

2030ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய நடவடிக்கை.

நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ஆண்டுக்கு 20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படுகிறது.

அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் வீடு என்பதுதான் மத்திய அரசின் தாரக மந்திரம் என்று அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com