மத்திய பட்ஜெட் எதிரொலி: நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 'விர்' !  

மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வு அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக நாடுமுழுவதும் வெள்ளி நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயரவுள்ளன.
மத்திய பட்ஜெட் எதிரொலி: நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 'விர்' !  

சென்னை: மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வு அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக நாடுமுழுவதும் வெள்ளி நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயரவுள்ளன.

வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019 - 20  ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது கலால் வரி ஒரு ரூபாயும், சாலைகள் மீதான 'செஸ்' வரி ஒரு ரூபாயும் உயர்த்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வு அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக நாடுமுழுவதும் வெள்ளி நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயரவுள்ளன.

உயர்த்தப்பட்ட வரிகளுடன் உள்ளூர் வரிகளும் கூடுதலாக இணையும் என்பதால் நாட்டில் வெவேறு இடங்களில் விலைகள் மாறுபட வாய்ப்பு உள்ளது.

இருந்த போதிலும் பெட்ரோல் விலை குறைந்தபட்சமாக 2.50 ரூபாயும்,. டீசல் விலை 2.30 ரூபாயும் உயரும் என்று கூறப்படுகிறது. இந்த விலை உயர்வானது வெள்ளி நள்ளிரவு முதல் உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிகிறது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com