Enable Javscript for better performance
26 exotic birds were found and rescued in a joint operation of Border Security Force- Dinamani

சுடச்சுட

    

    கேரளாவுக்கு கடத்த முயன்ற 26 அரிய வகைப் பறவைகள் பறிமுதல்: 8 பேர் கைது

    By DIN  |   Published on : 08th July 2019 11:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    exotic_birds

     

    கேரளாவுக்கு கடத்த முயன்ற 26 அரிய வகைப் பறவைகளை எல்லையோரப் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். 

    முன்னதாக, மிசோராமில் உள்ள கம்ரங் எனுமிடத்தில் அரிய வகைப் பறவைகள் கேரளாவுக்கு கடத்தப்பட உள்ளதாக அப்பகுதி வருவாய் ஆணையர் மற்றும் எல்லையோரப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து அங்கு நடத்திய தேடுதல் வேட்டையில் வெளிநாடுகளைச் சேர்ந்த 26 அரிய வகைப் பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு ரூ.28 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கேரளாவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் மிசோராமைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai