சுடச்சுட

    

    மும்பையில் அதிக கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    By DIN  |   Published on : 08th July 2019 02:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Mumbai_Rainfall

     

    மகாராஷ்டிர மாநிலம், மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரயில் சேவையும் பாதிக்கப்பட்டன. 

    2005ஆம் ஆண்டுக்கு பிறகு மும்பையில் மிக அதிக அளவு மழை பெய்தது இந்த ஆண்டில்தான். மழை காரணமாக பல்வேறு இடங்களில் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், மும்பை மற்றும் புறநகர் பகுதிகளான தானே, ராய்கட் மற்றும் பால்கர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஜூலை 9 மற்றும் 10-ஆம் தேதி முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai