மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் மத்திய பட்ஜெட்: நீதி ஆயோக் துணைத் தலைவர்

மின்சார வாகனங்கள் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவிக்க விரும்புகிறது என்பதையே மத்திய பட்ஜெட் தெளிவாகக் காட்டுகிறது என்று நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறினார்.
மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் மத்திய பட்ஜெட்: நீதி ஆயோக் துணைத் தலைவர்

மின்சார வாகனங்கள் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவிக்க விரும்புகிறது என்பதையே மத்திய பட்ஜெட் தெளிவாகக் காட்டுகிறது என்று நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறினார்.
 கடந்த வெள்ளிக்கிழமை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மின்சார வாகன கடன்களுக்காக செலுத்தப்படும் வட்டியைக் காட்டி ரூ.1.5 லட்சம் வரையில் வருமான வரிச் சலுகை பெறலாம் என்று அறிவித்தார். சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
 இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் இதுகுறித்து கூறியதாவது:
 மின்சார வாகன பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவிக்க விரும்புகிறது என்பதை, இந்த மத்திய பட்ஜெட்டின் மூலம் வாகன உற்பத்தித் துறை தெளிவாக உணர்ந்திருக்கும். நீதி ஆயோக்கும் இதையே தான் முன்பு வலியுறுத்தியிருந்தது. இந்தியாவில் போக்குவரத்தின் எதிர்காலமானது மின்சார வாகனங்களை நோக்கி நகருகிறது என்பதை கடந்த ஜூன் 21-ஆம் தேதி கலந்தாலோசனைக் கூட்டம் ஒன்றில் கூறியிருந்தேன். மின்சார வாகன உற்பத்தித் துறையில் உலக அளவில் இந்தியா தலைமை வகிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
 மின்சார வாகன பயன்பாட்டை முழுமையாக அமல்படுத்துவதற்கு கால அவகாசம் ஒன்று நிர்ணயிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அந்தத் துறைக்குத் தேவையான முதலீடுகள் கிடைக்காது என்பதுடன், மாற்றத்துக்கான அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகளும் இருக்காது.
 பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை மேலும் அதிகரிப்பதன் மூலம் அவற்றின் பயன்பாடு குறையும் என்பதுடன், அவற்றுக்கு மாற்றாக இருக்கும் மின்சார வாகனங்களின் தேவை அதிகரிக்கும் என்று ராஜீவ் குமார் கூறினார்.
 மூன்று சக்கர வாகன போக்குவரத்தில் 2023-க்கு உள்ளாகவும், இருசக்கர வாகன போக்குவரத்தில் 2025-க்கு உள்ளாகவும் முழுமையாக மின்சார வாகன பயன்பாட்டை கொண்டுவர வேண்டுமென நீதி ஆயோக் திட்டமிட்டுள்ளது. அதுதொடர்பான உறுதியான நடவடிக்கைகளை பரிந்துரைக்குமாறு, கடந்த மாதம் நடைபெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்திலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com