அரசு கடன் பத்திரங்கள் வெளியீடு: மத்திய அரசுடன்ஆலோசிக்க ஆர்பிஐ முடிவு

அரசு கடன் பத்திரங்களை வெளியிடுவது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்க இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழுக் கூட்டத்தில்  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழுக் கூட்டத்தில்  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.


அரசு கடன் பத்திரங்களை வெளியிடுவது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்க இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், இவை முதல்முறையாக வெளிநாட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளன.
நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க உள்நாட்டு நிதி சார்ந்த நடவடிக்கைகளை மட்டுமே முழுமையாக நம்பியிருக்காமல், வெளிநாட்டில் இருந்தும் நிதி திரட்டும் வகையில் இந்த அரசு கடன் பத்திரங்கள் வெளியிடப்பட இருக்கின்றன. 
இந்த பத்திரங்களை வாங்குபவர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வட்டியுடன் முதலீட்டுத் தொகை திரும்ப அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் வருவாய்க்கும், செலவுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் அரசு சார்பில் ஆர்பிஐ இந்த கடன் பத்திரங்களை வெளியிடுவது வழக்கமாகும்.
தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை  திங்கள்கிழமை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளன. வெளிநாடுகளில் விற்பனை செய்யத்தக்க அரசு கடன் பத்திரங்களை வெளியிடுவது குறித்து மத்திய அரசுடன் ஆர்பிஐ விரைவில் ஆலோசனை நடத்தும் என்றார்.
பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய அரசு வெளிநாடுகளில் விற்பனை செய்யத்தக்க அரசு கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டுவது குறைவாகவே உள்ளது. மேலும், நிதி திரட்டுவதற்காக மத்திய அரசு அடிக்கடி வெளிநாட்டுச் சந்தைகளை அணுகுவதுமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com