சிறையில் தயாரிக்கும் பிரியாணியை ருசிக்க ஆசையா? ஸ்விக்கியிலேயே கிடைக்கும்! அதுவும் ரூ.127க்கு

சிறையில் கைதிகளால் தயாரிக்கப்படும் பிரியாணியை ஸ்விக்கி மூலம் விற்பனை செய்யும் முறையை கேரள சிறைத்துறை அதிகாரிகள் இன்று தொடங்கி வைத்தனர்.
சிறையில் தயாரிக்கும் பிரியாணியை ருசிக்க ஆசையா? ஸ்விக்கியிலேயே கிடைக்கும்! அதுவும் ரூ.127க்கு


திரிசூர்: சிறையில் கைதிகளால் தயாரிக்கப்படும் பிரியாணியை ஸ்விக்கி மூலம் விற்பனை செய்யும் முறையை கேரள சிறைத்துறை அதிகாரிகள் இன்று தொடங்கி வைத்தனர்.

அதன்படி, சூடான பிரியாணி, ஒரு சிக்கன் லெக் பீஸ், மூன்று சப்பாத்திகள், ஒரு கப் கேக், சாலட், ஊறுகாய், ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் மற்றும் வாழை இலை ஆகியவற்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் விற்பனைக்காக இந்த காம்போ பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 

விய்யூர் மத்திய சிறையில் உள்ள சிறைக் கைதிகளே இதனை தயாரிக்கிறார்கள். இந்த உணவு ரூ.127க்கு ஸ்விக்கியில் இன்று முதல் கிடைக்கும்.

ஏற்கனவே உணவு தயாரிப்புத் தொழிலில் சிறைக் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். ஆனால் முதல் முறையாக ஆன்லைன் விற்பனையில் இணைந்துள்ளோம். 2011ம் ஆண்டு முதல் சப்பாத்திகளை செய்து விற்பனை செய்து வருகிறோம் என்கிறார் சிறைத் துறை அதிகாரி.

தரம், சுவை மற்றும் குறைந்த விலை காரணமாக, சிறையில் தயாரிக்கும் உணவுக்கு நிச்சயம் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் சிறைத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

சிறைத் துறை அதிகாரிகளின் கண்காணிப்பில், சுமார் 100 சிறைக் கைதிகள் உணவு தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள். ஒரு நாளைக்கு 25000 சப்பாத்திகளும், 500 பிரியாணிகளும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெயில் உணவு மட்டுமல்ல, ஜெயிலில் சில நாட்கள் தங்கியிருக்கும் வாய்ப்பை ஏற்படுத்தவும் விய்யூர் சிறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஒரு நாளைக்கு இவ்வளவு கட்டணம் என செலுத்தி, சிறை அறையில் தங்கியிருக்கும் ஒரு அனுபவத்தை பொதுமக்கள் பெறும் வகையில் இந்த திட்டம் வெகு விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

ஒரு வேளை இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், அடுத்த கோடை விடுமுறையை பலர் ஜெயிலிலும் கழிக்கலாமோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com