எம்எல்ஏ-க்களின் ராஜிநாமாவை ஆராய வேண்டியுள்ளது: கர்நாடக பேரவைத் தலைவர்

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ-க்களின் ராஜிநாமா தாமாக முன்வந்து நேர்மையாக அளிக்கப்பட்டது தான் என்பதை ஆராய வேண்டியுள்ளது என்று கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
எம்எல்ஏ-க்களின் ராஜிநாமாவை ஆராய வேண்டியுள்ளது: கர்நாடக பேரவைத் தலைவர்


கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ-க்களின் ராஜிநாமா தாமாக முன்வந்து நேர்மையாக அளிக்கப்பட்டது தான் என்பதை ஆராய வேண்டியுள்ளது என்று கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.   

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் இன்று மாலை சபாநாயகர் முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் கேஆர் ரமேஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

"நடைமுறைகளை நான் தாமதப்படுத்துவதாக சில செய்திகளைப் பார்த்தேன். அது வருத்தமளிக்கிறது. ஆளுநர் என்னிடம் 6-ஆம் தேதி தான் தெரிவித்தார். அதுவரை நான் அலுவலகத்தில் தான் இருந்தேன், அதன்பிறகு எனது தனிப்பட்ட காரியங்களுக்காக நான் கிளம்பினேன். அதற்கு முன்பு வரை எந்த எம்எல்ஏ-வும் என்னைச் சந்திக்க வருவதாக தகவல் தெரிவிக்கவில்லை. 

ஜூலை 6-ஆம் தேதி மதியம் 1.30 மணி வரை நான் எனது அறையில் இருந்தேன். எம்எல்ஏ-க்கள் வந்தது மதியம் 2 மணிக்கு. அவர்கள் என்னைச் சந்திக்க வருவதாக முன் அனுமதி எதுவும் பெறவில்லை. எனவே, அவர்கள் வருவது அறிந்து நான் ஓடி ஒளிந்தேன் என்பது பொய். 

கர்நாடக சட்டப்பேரவை விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி, விதி எண் 202-ன் கீழ் இந்த ராஜிநாமாக்களை திங்கள்கிழமை ஆராய்ந்தேன். 8 கடிதங்கள் உகந்த வடிவங்களில் இல்லை. இன்று நேரில் சந்தித்தபோது ராஜிநாமா செய்வதில் உறுதியாக இருந்தால், உகந்த வடிவத்தில் கடிதங்களை அளிக்க வேண்டும் என்று அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் தற்போது உகந்த வடிவத்தில் ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளனர். இந்த ராஜிநாமா கடிதங்கள் தாமாக முன்வந்து நேர்மையாக அளிக்கப்பட்ட கடிதமா என்பதை நான் ஆராய வேண்டியுள்ளது" என்றார். 

முன்னதாக: http://bit.ly/2LNVmoy

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com