அமித் ஷாவுடன் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சந்திப்பு

பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரை கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து பேசினார்.
அமித் ஷாவுடன் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சந்திப்பு


பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரை கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து பேசினார்.
கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் பாஜகவில் புதன்கிழமை இணைந்துள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்வது தொடர்பாக இந்தச் சந்திப்பில் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
புதிதாக கட்சியில் இணைந்த எம்எல்ஏக்களுடன் தில்லிக்கு வந்த பிரமோத் சாவந்த், அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்தார்.
அப்போது நடத்தப்பட்ட ஆலோசனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டால் தற்போது கோவா அரசுக்கு ஆதரவளித்துவரும் கூட்டணி கட்சிகளின் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டி வரும். காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வருகையால், பாஜகவின் பலம் 27ஆக உயர்ந்துள்ளது. இதனால், பாஜக அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்பி இருக்க வேண்டியதில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஜனநாயகத்தை பாஜக கொலை செய்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இருப்பினும், முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் எந்தவொரு நிபந்தனையுமின்றி கட்சியில் இணைந்துள்ளனர். அவர்கள் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்று நோக்கத்துடன் பாஜகவில் சேர்ந்துள்ளனர் என்றார்.
முன்னதாக, கோவா சட்டப்பேரவை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் பாபு காவ்லேகர், தனது கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 9 பேருடன் பாஜகவில் இணைந்தார்.
இதனால், கோவாவில் காங்கிரஸ் வசம் 5 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com