எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுகளை கவிழ்க்க பாஜக முயற்சி: மாயாவதி

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருக்கும் அரசுகளை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். 
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுகளை கவிழ்க்க பாஜக முயற்சி: மாயாவதி


எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருக்கும் அரசுகளை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். 
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், பண பலத்தை பயன்படுத்தியும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்தும் பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. 2018, 2019-இல் எந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் எல்லாம் பாஜக தோற்றதோ, அந்த மாநிலங்களில் அதிகாரத்தில் உள்ள எதிர்க்கட்சிகளின் அரசை கவிழ்க்க அக்கட்சி தற்போது முயற்சித்து வருகிறது. 
கர்நாடகம் மற்றும் கோவாவில் பண பலத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுக்க பாஜக மேற்கொள்ளும் முயற்சி, நாட்டின் ஜனநாயகத்தின் மீது படிந்த கறையாகும். கட்சித் தாவும் எம்எல்ஏக்கள், எம்.பி.க்களின் உறுப்பினர் அந்தஸ்தை ரத்து செய்யும் வகையிலான சட்டத்தை இயற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். 
கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து, அங்கு கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல், கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் மொத்தமாக கட்சியிலிருந்து விலகி, அங்கு ஆளும் கட்சியான பாஜகவில் இணைந்துள்ளனர். 
கோவாவில் 2017-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெருங் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸுக்கு, தற்போது 5 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com