காங்கிரஸ் ஆட்சியில்தான் ரயில்வே துறையில் வளர்ச்சி: மக்களவையில் திருநாவுக்கரசர் பெருமிதம்

காங்கிரஸ் ஆட்சியில்தான் ரயில்வே துறையில் வளர்ச்சி ஏற்பட்டது என்று மக்களவையில் வியாழக்கிழமை திருச்சி தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சியில்தான் ரயில்வே துறையில் வளர்ச்சி: மக்களவையில் திருநாவுக்கரசர் பெருமிதம்

காங்கிரஸ் ஆட்சியில்தான் ரயில்வே துறையில் வளர்ச்சி ஏற்பட்டது என்று மக்களவையில் வியாழக்கிழமை திருச்சி தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
மக்களவையில் வியாழக்கிழமை 2019-2020-ஆம் ஆண்டுக்கான ரயில்வே மானியக் கோரிக்கை விவாதத்தில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது: 
கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ரயில்வே துறையில் என்ன சாதனை செய்தது என ஆளும் கட்சி எம்பிக்களும், அமைச்சர்களும் கேள்வி எழுப்புகின்றனர். 1950-51-ஆம் ஆண்டில் ரயில்வே துறையில் மொத்த முதலீடு ரூ. 855 கோடி. 2013-14-இல் பாஜக ஆட்சிக்கு வந்த போது இந்த முதலீடு ரூ. 32,662 கோடியாக அதிகரித்திருந்தது. 9 லட்சமாக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 12.71 லட்சமாக உயர்ந்துள்ளனர். ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அது நிறப்பப்படவில்லை.
இதுபோன்ற வேலைவாய்ப்பு, முதலீடுகள் ரயில்வே துறையில் அதிகரித்துள்ளதற்கு யார் காரணம்? யார் சாதனை நிகழ்த்தியது. இது காங்கிரஸ் அரசால் இல்லையா? ஜவாஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி உள்ளிட்டோர் இல்லையா? ஆண்டுக்கு ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில்தான் வளர்ச்சி ஏற்பட்டது. இது பாஜக அரசால் ஏற்படவில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.6 லட்சம் முதலீடு ஈர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுபோன்று பெறப்படவில்லை.
தற்போது பட்ஜெட்டில் பல திட்டங்களை அறிவித்துள்ளனர். வரும் 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடியை அரசு முதலீடாகப் பெற வேண்டும். எங்கே இருந்து இப்பணம் கிடைக்கும்? நஷ்டத்தில் இயங்கிவரும் இத்துறையில் யார் முதலீடு செய்வார்கள்? 
எனவே, இது ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இதில் அரசு வெற்றியடையப் போவதில்லை. இந்நிலையில், ஒட்டுமொத்த மக்களும் ரயில்வே துறை தனியார்மயத்தை எதிர்ப்பார்கள் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com