சுடச்சுட

  

  மரண தண்டனையை நீக்க கோரும் மசோதா: காங்கிரஸ் எம்.பி. தாக்கல்

  By DIN  |   Published on : 13th July 2019 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மரண தண்டனையை நீக்க கோரும் மசோதாவை உத்தரகண்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி பிரதீப் தம்தா மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
  மசோதாவை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:
  அதிகபட்ச தண்டனையாக கருதப்படும் மரண தண்டனை விதிப்பதை இன்று உலக நாடுகள் பல வழக்கத்தில் இருந்து அகற்றி வருகின்றன. இந்தியாவும் அதேபோன்று மரண தண்டனை விதிப்பதை நிறுத்த வேண்டும்.
  சர்வதேச அளவில் 140 நாடுகள் மரண தண்டனையை நீக்கியுள்ளன. இன்னும் 53 நாடுகளில் மட்டுமே மரண தண்டனை அளிக்கும் வழக்கத்தில் உள்ளது. இதில் பெரும்பாலான நாடுகளின் அரசாங்கம் ஜனநாயக ரீதியில் அமையப்பெற்றது இல்லை.
  பல வழக்குகளில் தவறான விசாரணையின் காரணமாக பலருக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பின்பு, உயர்நீதித் துறை அமைப்புகளால் அந்த தண்டனை ரத்து செய்யப்பட்ட சம்பவங்களும் அதிக அளவில் நிகழ்ந்துள்ளன.
  குறிப்பாக, இந்த சட்டத்தால் சிறுபான்மையினர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில், அவர்களுக்கு முறையான சட்ட உதவிகள் கிடைக்கப்பெறாததே முக்கிய காரணம்.
  எனவே, மரண தண்டனைக்கு மாற்றாக, குற்றவாளிகளை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கும் வகையில் தண்டனை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai