சுடச்சுட

  

  கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை: மத்திய அரசின் புதிய திட்டம் தொடக்கம்  

  By DIN  |   Published on : 14th July 2019 02:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தவிர்க்கும் (ஓடிஎஃப்- பிளஸ்) என்ற புதிய திட்டத்தை அரசு சனிக்கிழமை தொடங்கி வைத்தது.
   இத்துடன் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரித்தலும், அதைக் கொண்டு செல்லும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
   இத்திட்டம் குறித்து மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம் மக்கள் மனதில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.
   மக்கும் கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை மற்றும் மனிதக் கழிவு மேலாண்மை ஆகிய 4 நிலைகளில் ஓடிஎஃப் பிளஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
   இதுகுறித்து நீர்வள அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் பரமேஸ்வரன் ஐயர் கூறுகையில், "திட்டம் தொடர்பாக தற்காலிக இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தற்போது அவற்றை வரைபடமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இத்திட்டத்திற்கான நிதி, மத்திய அரசு மற்றும் மாநில அரசிடம் இருந்தும் பெறப்படும்' என்றார்.
   மக்கும் கழிவு மேலாண்மைக்கான இலக்குகள் 2023-24ஆம் ஆண்டுக்குள் நிறைவு பெறும்.
   அதன்படி, ஒரு சமூக உரக்குழி தயாரிக்கப்பட்டு கிராமங்களில் உருவாகும் மக்கும் கழிவுகளை சேகரித்து செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். 700 கோபர்-தன் (சாண எரிவாயு ஆலைகள்) ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தது ஓர் ஆலை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai