சுடச்சுட

  
  pollachi drugs students arrested

   

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில், சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைத் தயாரித்ததில் தொடர்புடையதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  இதுதொடர்பாக காவல் துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "சோபியான் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை அதிகாலை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

  அப்போது, ஓரிடத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக 2 பேரைக் கைது செய்துள்ளோம். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai