சுடச்சுட

    

    "தாஜ்மஹால் ஸ்தூபி சீரமைப்பு பணி செப்.15-இல் முடிவடையும்'  

    By DIN  |   Published on : 14th July 2019 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    taj

    உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாகத் திகழும் தாஜ்மஹாலை சுற்றியுள்ள நான்கு ஸ்தூபிகளில் ஒன்றை சீரமைக்கும் பணிகள் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
     தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள 4 ஸ்தூபிகளில் ஒன்று மிகவும் சிதிலமடைந்ததையடுத்து அதனை சீரமைக்கும் பணிகள் சில நாள்களுக்கு முன்பு துவக்கப்பட்டன. இந்தப் பணிகளை கண்காணித்து வரும் அமர்நாத் குப்தா சனிக்கிழமை பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது: ஸ்தூபியில் இருந்த சில கற்கள் மாற்றப்பட்டுள்ளன. கருப்பு கல் லைனிங் சரிசெய்யப்பட்டுள்ளது. இதனால், ஸ்தூபிக்கு எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை. சீரமைப்பு பணிகளுக்காக சாரங்கள் அமைக்கப்பட்டு கோளாறுகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு விடும். உலக சுற்றுலா தினத்துக்கு முன்னதாகவே பணிகள் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.
     முன்னதாக, இந்த சீரமைப்பு பணிகள் குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை தலைவர் வசந்த் ஸ்வார்ன்கர் கூறுகையில், " இது வழக்கமாக மேற்கொள்ளும் பழுது நீக்க வேலை அல்ல ஆனால் தனித்துவம்மிக்க ஒரு பணி' என்றார்.
     யமுனை நதிக்கரையையொட்டி 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மஹால் உலகளவில் காதலின் சின்னமாக போற்றப்பட்டு வருகிறது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai