சுடச்சுட

  

  ராஜஸ்தானில் காவல் துறை விசாணையின்போது கைதி மரணம் அடைந்த சம்பவத்தில், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல் துறை துணை கண்காணிப்பாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
   இதுகுறித்து மாநில பணியாளர் நலத் துறை வெளியிட்ட அறிக்கையில், சுரு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேந்திர குமார் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்; காவல் துறை துணை கண்காணிப்பாளர் பன்வர்லால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் கூறியதாவது: நெமிசந்த் நாயக் என்பவர் திருட்டு வழக்கில் கடந்த 6-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்தபோது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அன்றிரவே உயிரிழந்தார். இதுதவிர, நெமிசந்தின் மைத்துனியும் போலீஸ் காவலில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, தனிப் படை போலீஸார் அங்கு சென்றனர். ஆனால் அவர் வாக்குமூலம் அளிக்க மறுத்துவிட்டார்.
   அந்தப் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று, அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஓம்பிரகாஷ்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai