உச்சநீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக விசாரிக்கப்படாத 900 வழக்குகள்

உச்சநீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக 900-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படாமல் உள்ளன
உச்சநீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக விசாரிக்கப்படாத 900 வழக்குகள்

உச்சநீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக 900-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படாமல் உள்ளன. மனுவில் உள்ள தவறுகள், போதிய விவரங்கள் இல்லாதது போன்ற காரணங்களால் இவை விசாரிக்கப்படாமல் நிலுவையிலேயே உள்ளன. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவின்படி நீதிமன்றப் பதிவாளர் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
 உச்சநீதிமன்றத்தில் ஜூலை மாதம் வரை மொத்தம் 59,695 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 13,563 வழக்குகள் தொடர்பான மனுக்களில் போதிய விவரங்கள் அளிக்கப்படவில்லை. மேலும், அவற்றில் 900-க்கும் மேற்பட்ட மனுக்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
 முறையான விவரங்கள் இல்லாத வழக்குகளைத் தாக்கல் செய்த மனுதாரர்களுக்கு தலைமை நீதிபதி 4 வார கால அவகாசம் அளித்துள்ளார். அதற்குள் மனுக்களில் அவர்கள் தேவையான திருத்தங்களைச் செய்யாவிட்டால், வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது, மனு தாக்கல் செய்வது, மேல்முறையீடு செய்வது போன்றவற்றில் சில குறிப்பிட்ட நடைமுறைகள் உள்ளன. இவை முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டால் மட்டுமே வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மனுதாரர் அல்லது வழக்குரைஞர்கள் கவனக் குறைவாக தவறுகளுடன் மனுக்களைத் தாக்கல் செய்யும்போது, அவை விசாரிக்கப்படாத மனுக்களாக தேங்கிவிடுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com