கும்பல் தாக்குதல் கொலையைத் தடுக்க நாடு தழுவிய சட்டம்: மாயாவதி வலியுறுத்தல்

கும்பதல் தாக்குதல் கொலையைத் தடுக்க நாடு தழுவிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தினார்
கும்பல் தாக்குதல் கொலையைத் தடுக்க நாடு தழுவிய சட்டம்: மாயாவதி வலியுறுத்தல்

கும்பதல் தாக்குதல் கொலையைத் தடுக்க நாடு தழுவிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தினார்.
 இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 கும்பலால் அடித்துக் கொலை செய்யப்படுவதைத் தடுப்பதற்காக வரைவு மசோதாவை உத்தரப் பிரதேச சட்ட ஆணையம் கொண்டுவந்துள்ளதை வரவேற்கிறேன். அதேநேரம், நாடு முழுவதும் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்படும் சம்பவங்களை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். கும்பல் கொலையால் பலர் உயிரிழப்பது கவலை அளிக்கிறது.
 வரைவு மசோதாவில், அடித்துக் கொலை செய்யும் கும்பலுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் அம்சம் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.
 கடுமையான சட்டங்களை இயற்ற பகுஜன் சமாஜ் கட்சி போன்று மனஉறுதியை பாஜக வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கும்பல் கொலையில் ஈடுபடும் தீய சக்திகளை கட்டுப்படுத்த முடியும் என்று மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com