சந்திர கிரகணம்: திருமலையில் 16-இல் தரிசனங்கள் ரத்து 

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருமலை வெங்கடாசலபதி கோயிலில் வரும் 16-ஆம் தேதி அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருமலை வெங்கடாசலபதி கோயிலில் வரும் 16-ஆம் தேதி அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் வரும் 16-ஆம் தேதி காலை சுத்தப்படுத்தப்பட உள்ளது. எனவே அன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
 அன்று நள்ளிரவு 1.14 மணி முதல் அதிகாலை 4.15 மணி வரை சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இதையொட்டி இரவு 7 மணிமுதல் மறுநாள் காலை 5 மணிவரை ஏழுமலையான் கோயில் மூடப்படும்.
 இதன் காரணமாக, 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 16-ஆம் தேதி ரூ.300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம், நேர ஒதுக்கீடு தரிசனம் மற்றும் விஐபி-க்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படும். அன்று தர்ம தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் குறிப்பிட்ட அளவில் அனுமதிக்கப்படுவர்.
 17-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். எனினும், அன்று காலையில் பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்ய அனுமதி இல்லை.
 முன்னதாக, 16-ஆம் தேதி மாலையுடன் காத்திருப்பு அறைகள், அன்னதானக் கூடம், முடிகாணிக்கை செலுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் மூடப்படும். இதை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com