பிரிவினைவாதிகள் முழு அடைப்பு போராட்டம்: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைப்பு

பிரிவினைவாதிகள் முழு அடைப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட அழைப்பு விடுத்திருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றைய தினம் மட்டும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

பிரிவினைவாதிகள் முழு அடைப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட அழைப்பு விடுத்திருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றைய தினம் மட்டும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
 கடந்த ஜூன் 30ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து பஹல்காம், பால்தால் ஆகிய முகாம்களிலிருந்து இதுவரை 12 குழுக்கள் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக புறப்பட்டுச் சென்றது.
 அமர்நாத் யாத்திரைக்காக பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 1.50 லட்சம் பேர் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
 தோக்ரா பகுதியை ஆட்சி செய்துவந்த மகாராஜா ஹரி சிங்கின் படை வீரர்கள், 1931ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி, 22 பேரை சுட்டுக் கொன்றனர்.
 இதையொட்டி, ஆண்டுதோறும் ஜூலை மாதம் 13ஆம் தேதி தியாகிகள் தினமாக காஷ்மீரில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிரிவினைவாதிகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு சனிக்கிழமை அழைப்பு விடுத்திருந்தனர்.
 காஷ்மீர் பள்ளத்தாக்கில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கடைகள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக மையங்கள் ஆகியவை மூடப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.
 ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியின் 3ஆவது நினைவு தினத்தையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 8ஆம் தேதியும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com