ஸ்ரீநகரில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி: ஆளுநர் புறக்கணிப்பு 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகரில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி: ஆளுநர் புறக்கணிப்பு 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 கடந்த 1931-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் மகாராஜா ஹரி சிங் ஆட்சியின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் நினைவாக அரசு சார்பில் ஆண்டுதோறும் ஜூலை 13-ஆம் தேதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 அந்த வகையில், ஸ்ரீநகரில் சனிக்கிழமை நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் ஆளுநர் சத்யபால் மாலிக் புறக்கணிப்பு செய்தார். அவருக்குப் பதிலாக, அவரது ஆலோசகர் குர்ஷீத் அகமதுவை அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆளுநர் அனுப்பி வைத்தார்.
 இதற்கு முன்பு, கடந்த ஆண்டு நடைபெற்ற தியாகிகள் நினைவுதின அஞ்சலி நிகழ்ச்சியில் அப்போது ஆளுநராக இருந்த என்.என். வோராவும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். ஆனால், 2017-ஆம் ஆண்டு அவர் கலந்து கொண்டார். அவரைப் பின்பற்றி தற்போதைய ஆளுநர் சத்ய பால் மாலிக்கும் இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, பிடிபி கட்சியின் மூத்த தலைவர் ஏஆர் வீரி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் பீர்ஸாதா சயூத் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் தியாகிகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
 அதேசமயம், பிரிவினைவாத தலைவர்களான ஹூரியத் மாநாட்டு கட்சியைச் சேர்ந்த மீர்வாய்ஸ் உமர் ஃபாரூக் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தடுப்பதற்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com