மாநிலங்களின் ஜிஎஸ்டி வசூல் ரூ.5.18 லட்சம் கோடியாக உயர்வு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ.5.18 லட்சம் கோடியாக
மாநிலங்களின் ஜிஎஸ்டி வசூல் ரூ.5.18 லட்சம் கோடியாக உயர்வு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ.5.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
சரக்கு-சேவை வரி வருவாயை அதிகரிக்கும் நோக்கில், இணையவழி வரி செலுத்துகையில் சீர்திருத்தங்கள், வரி செலுத்தாதவர்களைக் கண்டறிதல், இணையவழியில் ரசீது வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சரக்கு-சேவை வரி வருவாய் அதிகரித்து வருகிறது. கடந்த 2017-18 நிதியாண்டின் ஜூலை முதல் மார்ச் வரையிலான 9 மாத காலத்தில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சரக்கு-சேவை வரி வருவாய் ரூ.2.91 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் ரூ.5.18 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
சரக்கு-சேவை வரி அமல்படுத்தப்பட்டதால், மாநிலங்களின் வரி வருவாய் இழப்பைச் சரிசெய்யும் நோக்கில், கடந்த 2017-18 நிதியாண்டில் ரூ.48,178 கோடி மத்திய அரசால் வழங்கப்பட்டது. கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ.81,177 கோடியை, மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கியது என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com