எவ்வித போரையும் எதிர்கொள்ள இந்தியா தயார்: விமானப்படை தலைமை தளபதி

கார்கில் மாதிரியான போர்கள், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி அளிப்பது உள்ளிட்ட எவ்வித சவால்களையும் எதிர்கொள்ள இந்திய விமானப்


கார்கில் மாதிரியான போர்கள், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி அளிப்பது உள்ளிட்ட எவ்வித சவால்களையும் எதிர்கொள்ள இந்திய விமானப் படை தயாராக உள்ளது என்று அந்தப் படையின் தலைமைத் தளபதி பி.எஸ்.தனோவா தெரிவித்துள்ளார்.
கடந்த 1999-ஆம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்ற போது, இந்திய விமானப்படை நடத்திய ஆபரேஷன் சாஃபெத் சாகர்' நடைபெற்று 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, தில்லியில் அதுகுறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. அந்தக் கருத்தரங்கில் விமானப்படை தலைமை தளபதி பி. எஸ். தனோவா பேசிய
தாவது: கார்கில் போர் நடைபெற்றபோது, ஊடுருவல்காரர்களை  இந்தியாவை விட்டு வெளியேற்றுவதற்காக ஆபரேஷன் விஜய்' நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, வானில் இருந்து தரையில் குண்டு வீசப்பட்ட ஆபரேஷன் சாஃபெத் சாகர்' நடத்தப்பட்டது. மிக்-21 போர்விமானத்தை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
வானிலிருந்து தரையில் குண்டு வீசியது அதுதான் முதல்முறை. அப்போது பல கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் தற்போது நமது விமானப்படைக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. அதிநவீன ரக போர்விமானங்கள், மிக்-29, மிக்-27, ஜாகுவார் உள்ளிட்ட போர்விமானங்கள் நம்மிடம் உள்ளன. வெளிநாடுகளின் வான்வெளியை கண்காணிக்கும் தொழில்நுட்பமும் நம்மிடம் உள்ளது. 
இந்த ஆண்டு தொடக்கத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்களை குறி வைத்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். 
அதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நமது விமானப் படை தாக்குதல் நடத்தியது. அந்தப் பதிலடி தாக்குதலை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றினோம். இவ்வாறு அனைத்து விதமான போரையும் எதிர்கொள்ள இந்திய விமானப் படை தற்போது தயாராக உள்ளது என்று பி.எஸ்.தனோவா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com