மகாராஷ்டிரம், உ.பி., மாநிலங்களுக்கு புதிய பாஜக தலைவர்கள் நியமனம்

மகாராஷ்டிர பாஜக தலைவராக அந்த மாநில அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீலும், உத்தரப் பிரதேச பாஜக தலைவராக சுதந்திர தேவ் சிங்கும்


மகாராஷ்டிர பாஜக தலைவராக அந்த மாநில அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீலும், உத்தரப் பிரதேச பாஜக தலைவராக சுதந்திர தேவ் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 மகாராஷ்டிரத்தில் இந்த ஆண்டு இறுதியில்  மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அந்த மாநில பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோது, அதே சமூகத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் பாட்டீல் அந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்த்து வைத்ததில்  முக்கியப் பங்கு வகித்தார். இதற்கு முன்பு மத்திய அமைச்சரான தன்வே பாட்டீல் மகாராஷ்டிர பாஜக தலைவராக இருந்து வந்தார்.
மும்பை நகர பாஜகவுக்கு புதிய தலைவராக மங்கள் பிரபாத் லோதா நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியை மாநில அமைச்சர் ஆசிஷ் ஷேலர் வகித்து வந்தார்.
உத்தரப் பிரதேச பாஜக தலைவராக இருந்து வந்த மகேந்திரநாத் பாண்டே மத்திய அமைச்சராகப் பதவியேற்றதால், பாஜக கட்சி விதிமுறைகள்படி மாநில கட்சித் தலைவர் பதவிக்கு புதிய தலைவர் நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, சுதந்திர தேவ் சிங் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com