கர்நாடக பேரவையில் பாஜக உள்ளிருப்புப் போராட்டம்

கர்நாடக சட்டப்பேரவையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது  நம்பிக்கை வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடத்தப்படாததால், மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது.
கர்நாடக பேரவையில் பாஜக உள்ளிருப்புப் போராட்டம்

கர்நாடக சட்டப்பேரவையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது  நம்பிக்கை வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடத்தப்படாததால், மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது.

பரபரப்பான சூழலில் பெங்களூரு விதான செüதாவில் கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை காலை தொடங்கியதும், நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்யுமாறு முதல்வர் குமாரசாமியை பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் கேட்டுக் கொண்டார்.

முதல்வர் குமாரசாமி பேசத்தொடங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா குறுக்கிட்டு,

நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஒரே நாளில் நடத்த வேண்டும். 1995, 1998, 2006, 2008, 2010-ஆம் ஆண்டுகளில் இதே அவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்புகள் ஒரேநாளில் நடத்தப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் குமாரசாமி பேசியதாவது:

இந்த அவையில் பல்வேறு காலகட்டங்களில் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  ஆனால், நம்பிக்கை தீர்மானம் கொண்டுவந்ததற்கான அன்றைய நிலை வேறு; இன்றைய நிலை வேறு. கர்நாடகத்தில் எழுந்துள்ள அரசியல் நிலையை ஒட்டுமொத்த நாடே கூர்ந்து கவனித்துவருகிறது. ஆட்சி, அதிகாரம் நிலையானது என்ற நினைப்பில் நான் இல்லை என்றார்.

அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, ஒழுங்கு பிரச்னையைக் கொண்டுவந்தார்.  இதைத் தொடர்ந்து, நண்பகல் 1.45 மணி,  மாலை 4 மணி, மாலை 5.45மணிக்கு அவை அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டது.

காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியபடி இருந்ததைத் தொடர்ந்து,  மாலை 6.14 மணிக்கு அவை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கர்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நண்பகல் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். 

கர்நாடக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெறாததைக் கண்டித்து, பாஜகவினர் பேரவையில்  உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நம்பிக்கை தீர்மானத்தின் மீது வியாழக்கிழமையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் தகவல் அளித்த பிறகும், காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் காலை முதல் மாலை வரை கால விரயம் செய்து அவையை நடத்தவிடாமல் செய்துவிட்டனர்.

இதை கண்டித்து பாஜக உறுப்பினர்கள் இரவு முழுவதும் சட்டப்பேரவையிலே தங்கியிருந்து, உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப் போகிறோம். நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com