எந்த மாநிலத்துக்கும் சிறப்பு பிரிவு அந்தஸ்து தரும் திட்டமில்லை: மக்களவையில் அமைச்சர் தகவல்

எந்த மாநிலத்துக்கும் புதிதாக சிறப்பு பிரிவு அந்தஸ்து தரும் திட்டமில்லை என்று மக்களவையில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடல் துறை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் கூறியுள்ளார்.
எந்த மாநிலத்துக்கும் சிறப்பு பிரிவு அந்தஸ்து தரும் திட்டமில்லை: மக்களவையில் அமைச்சர் தகவல்

எந்த மாநிலத்துக்கும் புதிதாக சிறப்பு பிரிவு அந்தஸ்து தரும் திட்டமில்லை என்று மக்களவையில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடல் துறை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும் இப்போது சிறப்பு அந்தஸ்து உள்ளது. அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு சில துறைகளைத் தேர்வு செய்து அவற்றில் மட்டும் சிறப்பு பிரிவு அந்தஸ்து அளிக்கப்பட்டிருந்தது. சிறப்பு அந்தஸ்துக்கும், சிறப்பு பிரிவுகளில் அந்தஸ்து வழங்கப்படுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. சிறப்பு அந்தஸ்து அளிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டிய அவசியம். ஆனால், சிறப்புப் பிரிவு அந்தஸ்து அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தால் போதுமானது.
 நீதி ஆயோக் அமைக்கப்பட்ட பிறகு, அதன் பரிந்துரையில் குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு பிரிவு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுவிட்டது.
ஆந்திரம், பிகார், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்களுக்கு சிறப்பு பிரிவு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மாநிலங்களவையில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ரிபுன் போரா இது தொடர்பாக பேசுகையில், "அஸ்ஸாம் உள்பட பல மாநிலங்கள் மீண்டும் சிறப்பு பிரிவு அந்தஸ்து கோரி வருகின்றன. அதனை அளிக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா?' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங், "எந்த மாநிலத்துக்கும் சிறப்பு பரிவு அந்தஸ்து அளிக்கக் கூடாது என நீதி ஆயோக் வலியுறுத்தி கூறியுள்ளது. மேலும், மத்திய அரசிடமும் இப்போது சிறப்பு பிரிவு அந்தஸ்து அளிக்கும் திட்டம் ஏதுமில்லை. மாநிலங்களை மேம்படுத்துவதற்காக நீதி ஆயோக் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. மாநிலங்களிடையே ஆரோக்கியமான போட்டி ஏற்படுத்துவதன் மூலமும் கூட்டாட்சி தத்துவத்தை மேம்படுத்த முடியும்' என்று பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com