டிக் டாக், ஹலோ செயலிகளுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

டிக் டாக், ஹலோ செயலிகளுக்கு 24 கேள்விகளுக்கு 22-ஆம் தேதிக்குள் பதில் கேட்டு, மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டிக் டாக், ஹலோ செயலிகளுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

டிக் டாக், ஹலோ செயலிகளுக்கு 24 கேள்விகளுக்கு 22-ஆம் தேதிக்குள் பதில் கேட்டு, மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டிக் டாக், ஹலோ செயலிகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆர்எஸ்எஸ் கிளை அமைப்புகளில் ஒன்றான சுதேசி ஜாக்ரண் மஞ்ச் புகார் தெரிவித்திருந்தது. அந்தப் புகாரில், டிக் டாக், ஹலோ ஆகிய செயலிகள், தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, டிக் டாக், ஹலோ செயலிகளின் நிறுவனங்களுக்கு 24 கேள்விகளுக்கு பதில் கேட்டு, மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், 24 கேள்விகளுக்கும் 22-ஆம் தேதிக்குள் உரிய பதிலை அளிக்கவில்லையெனில், டிக் டாக், ஹலோ செயலிகளுக்கு தடை விதிக்க நேரிடும் என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரித்துள்ளது.

24 கேள்விகள் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், "டிக் டாக், ஹலோ ஆகிய செயலிகள் தேச விரோத செயல்களுக்கான தளமாக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது; ஆதலால், அந்த செயலிகளை பயன்படுத்தும் இந்தியர்களின் தரவுகள் (டேட்டா) தற்போதும், எதிர்காலத்திலும் வெளிநாட்டு அரசுக்கோ அல்லது 3-ஆவது தரப்புக்கோ அல்லது தனியார் நிறுவனங்களுக்கோ அளிக்கப்பட மாட்டாது என்று 2 செயலிகளும் உறுதியளிக்க வேண்டும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி செய்திகளைத் தடுக்க டிக் டாக், ஹலோ செயலிகள் எடுத்த நடவடிக்கை, பிற சமூக ஊடகங்களின் தளங்களில் சித்திரிக்கப்பட்ட 11,000 அரசியல் விளம்பங்களை அதிக நிதி கொடுத்து வெளியிட்டதாக ஹலோ செயலி மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள், இந்தியாவில் 18 வயதுக்கும் குறைவானோர் சிறார்களாக பாவிக்கப்படும் நிலையில், டிக் டாக், ஹலோ செயலிகளில் 13 வயதுடையோர் சேருவதற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதி உள்ளிட்டவை குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது' என்றனர்.
டிக் டாக், ஹலோ செயலிகள் விளக்கம்: மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருப்பதையடுத்து, டிக் டாக், ஹலோ செயலி நிறுவனங்கள் சார்பில் விளக்கம் அளித்து கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய மக்களின் ஆதரவில்லாமல்,  தங்களால் இந்தியாவில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்க முடியாது, தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், செயலியை பயன்படுத்தும் மக்களின் தகவல்களை பராமரிப்பது தொடர்பான வசதியை ஏற்படுத்தவும், அடுத்த 3 ஆண்டுகளில் 100 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூல், வாட்ஸ் அப் போன்ற செயலிகளுக்கு இணையாக இந்தியாவில் டிக் டாக், ஹலோ ஆகிய செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
இத்தகைய சூழ்நிலையில், அந்த 2 செயலிகளுக்கும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com