பிரியங்கா காந்தி கைது ஜனநாயகத்துக்கு விரோதமானது: புதுவை முதல்வா் நாராயணசாமி கண்டனம்

உத்தரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று புதுச்சேரி முதல்வா் வே.நாராயணசாமி
பிரியங்கா காந்தி கைது ஜனநாயகத்துக்கு விரோதமானது: புதுவை முதல்வா் நாராயணசாமி கண்டனம்


புதுச்சேரி: உத்தரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று புதுச்சேரி முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்துள்ளாா்.

உத்தரபிரதேச மாநிலம், சோனாபத்ராவில் சொத்து தகராறில் நடந்த மோதலில் கொல்லப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்கிரஸ் தலைவா் பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடா்ந்து அவா் திடீரென தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். இதனை தோடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று முதல்வா் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் நாராயணசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், உத்தரபிரதேச மாநிலம், சோனாபத்ராவில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற பிரியங்கா காந்தியை தடுத்து கைது செய்துள்ளது ஜனநாயகத்துக்கு விரோதமானது, அவரை உடனடியாக விடுவித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்திரபிரதேசம் முதல்வரை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com