மறைமுக வரிகள் தொடர்பாக 7 சட்டங்களில் திருத்தம்: நிர்மலா சீதாராமன் 

மறைமுக வரிகளை எளிதாக்கும் பொருட்டு, அதுதொடர்பாக 7 சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார்.
மறைமுக வரிகள் தொடர்பாக 7 சட்டங்களில் திருத்தம்: நிர்மலா சீதாராமன் 

மறைமுக வரிகளை எளிதாக்கும் பொருட்டு, அதுதொடர்பாக 7 சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார்.
மறைமுக வரி, நேரடி வரி மற்றும் பினாமி தடுப்பு சட்டம், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் கொண்டுவருவதற்காக நிதி மசோதாக்களை மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மறைமுக வரிகளை எளிதாக்கும் பொருட்டு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) உள்பட 5 பெரும் பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜிஎஸ்டியில் மட்டும் 5 வெவ்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்படுகிறது. இதனால், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் பயனடையும்.
அதுமட்டுமன்றி, நேரடி வரிகள் தொடர்பான சட்டங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம், "இந்தியாவிலேயே தயாரிப்போம்' என்ற அரசின் திட்டத்தை வலுப்படுத்த முடியும். உற்பத்தி துறையில் இந்தியா அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதனால் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தத் திருத்தங்கள் மூலம், மறைமுக வரிகள் மற்றும் நேரடி வரிகள் தொடர்பான சட்டங்களை எளிதாகவும், சிறப்பாகவும் அமல்படுத்த முடியும் என்று கூறினார். இந்த திருத்தங்களுடன், நிதி சந்தை (செபி சட்டம்) தொடர்பான சட்டங்களிலும் திருத்தம் கொண்டுவருவதற்கு நிதி மசோதா தாக்கல் செய்தார்.
மறுப்பு..: இந்த நிதி மசோதாக்களில் சிலவற்றுக்கு கேரளத்தைச் சேர்ந்த ஆர்எஸ்பி எம்.பி. பிரேமசந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில்," பினாமி தடுப்பு சட்டம், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு நிதி மசோதாக்களை பயன்படுத்தக் கூடாது. வரிகள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதற்கு மட்டுமே நிதி மசோதாக்களை பயன்படுத்த வேண்டும்' என்றார். விவாதம் நடத்தாது, மற்ற சட்டங்களோடு, இந்த சட்டங்களின் திருத்தங்களையும் நிறைவேற்ற அரசு முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், "இந்தத் திருத்தங்கள் மிகவும் முக்கியம் என்று அரசு கருதுகிறது' என்றார்.
அதையடுத்து, பிரேமசந்திரன் மறுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, இதற்கு முன்னரும் வரிகள் தொடர்பில்லாத சட்டங்கள், நிதி மசோதாக்கள் மூலம் திருத்தம் செய்யப்பட்டுள்ளன என்று கூறி, நிதி மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு குரல் வாக்கெடுப்பு நடத்தினார். அதையடுத்து பெரும்பான்மை அடிப்படையில் இந்த நிதி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com