மின்னணு முறை பணப்பரிமாற்றம் 50% அதிகரிப்பு: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

கடந்த 2018-19 நிதியாண்டில் மின்னணு முறையில் (டிஜிட்டல்) பணப்பரிமாற்றம் செய்வது 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையி
மின்னணு முறை பணப்பரிமாற்றம் 50% அதிகரிப்பு: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

கடந்த 2018-19 நிதியாண்டில் மின்னணு முறையில் (டிஜிட்டல்) பணப்பரிமாற்றம் செய்வது 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு மின்னணு முறை பணப்பரிமாற்றத்துக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஏனெனில், இதன் மூலம் கருப்புப் பணம் உருவாவதைப் பெருமளவில் தடுக்க முடியும். இந்நிலையில், மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்விக்கு  வியாழக்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

மின்னணு முறைப் பணப்பரிமாற்றத்தை அதிகரிக்க மத்திய அரசு தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.3,133.58 கோடிக்கு மின்னணுப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இது 51.35 சதவீத அதிகரிப்பாகும். கடந்த 2017-18 நிதியாண்டில் இது ரூ.2,070.39 கோடியாக இருந்தது. எனினும், சதவீத அடிப்படையில் முந்தைய ஆண்டைவிட இப்போது குறைவாகவே மின்னணுப் பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளது. 

"பீம்' செயலி மூலம் நடைபெறும் பணப்பரிமாற்றம் 2017-இல் ரூ.31.9 லட்சமாக இருந்தது. 2019-ஆம் ஆண்டில் ஜூன் மாத இறுதி வரை 154.9 லட்சம் கோடி "பீம்' செயலி மூலம் பணம் பரிமாறப்பட்டுள்ளது. "பீம்' செயலி முழுமையாக இந்தியத் தொழில்நுட்பத் தயாரிப்பாகும். பே டிஎம், போன் பே, கூகுள் டெஸ் ஆப் ஆகியவை மூலம் மின்னணுப் பரிமாற்றத் துறையில் பீம் செயலிக்கு அதிக 
போட்டி உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com