Enable Javscript for better performance
கேரளத்தில் தொடரும் கனமழை: 2 பேர் பலி: தமிழக மீனவர்கள் 3 பேர் மாயம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கேரளத்தில் தொடரும் கனமழை: 2 பேர் பலி: தமிழக மீனவர்கள் 3 பேர் மாயம்

    By DIN  |   Published On : 21st July 2019 02:28 AM  |   Last Updated : 21st July 2019 02:28 AM  |  அ+அ அ-  |  

    கேரளத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு 2 பேர் பலியாகினர். தமிழக மீனவர்கள் 3 பேர் உள்பட 4 பேரை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அந்த மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

    காசர்கோடு மாவட்டம், கரியாங்கோடு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், 50 -க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். காசர்கோடு மாவட்டத்தின் வடமேற்கு பகுதியில் "ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

    இடுக்கி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால் அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமடைந்தன. மணிமாலா நதிக்கு மீன் பிடிக்க சென்ற கோஷி வர்கீஸ் (53) நதிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த திலீப் குமார் (54) தென்னை மரம் சாய்ந்து உயிரிழந்தார்.

    கொச்சி கடற்கரைக்கு குளிக்க சென்றவரை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 3 பேர்இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களுடன் சென்றவர்கள் பாதுகாப்பாக நீந்தி கரை சேர்ந்தனர்.

    விழிஞ்ஞம் மீனவர்கள் மீட்பு..: விழிஞ்ஞம் பகுதியில் புதன்கிழமை கடலுக்குள் சென்ற மீனவர்களின் படகு பழுதடைந்ததையடுத்து நடுக்கடலில் 4 மீனவர்கள் சிக்கினர். அவர்களை உடனடியாக மீட்குமாறு மீனவர்களின் உறவினர்கள் விழிஞ்ஞம் கடற்கரைக்கு அருகே வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இந்நிலையில், அவர்கள் சனிக்கிழமை பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். உணவு, தண்ணீர் இன்றி நடுக்கடலில் சிக்கிக்கொண்டதால், சிலரது உடல்நிலை மோசமடைந்திருந்தது. அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    உம்மன் சாண்டி ஆய்வு..: மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை சனிக்கிழமை காலை பார்வையிட்ட அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி, விழிஞ்சம் பகுதியில் மீட்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். 

    வானிலை அறிக்கை..: மழை குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், "காசர்கோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது.கண்ணூர் மாவட்டத்தின் தலசேரி மற்றும் தலிபரம்பு பகுதிகளில் முறையே 19.4 செ.மீ மற்றும் 17.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடல் சீற்றம் அதிகம் இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம்' என்று அறிவுறுத்தியுள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp