ஏழு மணிக்கு ஆளுநரைச் சந்தித்து ராஜிநாமா?: கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சுற்றும் சந்தேகங்கள் 

ஏழு மணிக்கு ஆளுநரைச் சந்தித்து  கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள்! வெளியாகியுள்ளது.
ஏழு மணிக்கு ஆளுநரைச் சந்தித்து ராஜிநாமா?: கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சுற்றும் சந்தேகங்கள் 

பெங்களூரு: ஏழு மணிக்கு ஆளுநரைச் சந்தித்து  கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ்,  மஜதவைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் ராஜிநாமா கடிதம் அளித்துவிட்டு மும்பையில் தஞ்சம் அடைந்ததைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. 14 மாதங்களாக ஆட்சியில் இருக்கும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு தனது பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. 

இதைத் தொடர்ந்து, கர்நாடக சட்டப்பேரவையில் ஜூலை 18-இல் தனது அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்து பேசினார். 

இந்த நிலையில், 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு தொடர்பாக அரைநாள் விவாதம் நடைபெற்றது. இதனிடையே, வாக்கெடுப்பை மேற்கொள்ள காலம் கடத்தக் கூடாது என்று ஆளுநர் வஜுபாய்வாலா, சட்டப்பேரவைக்கு அனுப்பியிருந்த தகவல் தொடர்பாக, அடுத்த அரைநாள் விவாதம் நடைபெற்றது. 

இதையடுத்து, சட்டப் பேரவை ஜூலை 19-இல் கூடியதும் நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் குமாரசாமி பேசினார். இதனிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பை ஜூலை 19-ஆம் தேதி நண்பகல் 1.30 மணிக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் விதித்திருந்த கெடு குறித்து குமாரசாமி குறிப்பிட்டதும், அதுதொடர்பாக காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் பேசத் தொடங்கினர். ஆளுநர் விதித்த கெடுவைக் கடந்து விவாதம் நீண்டது. இதைத் தொடர்ந்து, அவை மீண்டும் கூடிய நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை ஜூலை 19-ஆம் தேதிக்குள் நடத்துமாறு ஆளுநர் இரண்டாவது முறை கடிதம் எழுதி கெடு விதித்திருப்பதை முதல்வர் குமாரசாமி அவையில் தெரிவித்தார். 

ஆளுநரின் தலையீடு சரியா? என்று காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் விவாதிக்கத் தொடங்கினர். இதற்கு இடையில், நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். 

அன்றைக்கே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு பாஜக வலியுறுத்தியது. இதற்கு இணங்காத முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் நம்பிக்கை தீர்மானத்தின் மீது பலரும் பேசவிருப்பதால் அவையை ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்குமாறும், அன்றைக்கு கண்டிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமென்றும் உறுதி அளித்தனர். இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட பேரவைத்தலைவர் ரமேஷ்குமார், பாஜகவின் எதிர்ப்புக்கு இடையே ஜூலை 22-ஆம் தேதிக்கு(திங்கள்கிழமை)அவையை ஒத்திவைத்தார்.

அதேசமயம் கர்நாடக சட்டப்பேரவையில் திங்களன்றே  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய 2 சுயேச்சை எம்எல்ஏக்களின் முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.  அதையடுத்து இன்றும் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் அவகாசம் வழங்குமாறு சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் முதல்வர் குமாரசாமி கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு சபாநாயகர் ஒப்புதல் வழங்கவில்லை.

அதேநேரம் காங்கிரஸ், மஜத போன்ற கட்சி கொறடாக்கள் உத்தரவு பிறப்பிக்கலாம்; அந்த உத்தரவு அதிருப்தி எம்எல்ஏக்களுக்கும் பொருந்தும் என்று சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன் செவ்வாய் காலை 11 மணிக்கு தன்னை சந்திக்க வேண்டும் என கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் சம்மன் அனுப்பவும் ஆணையிட்டார்.

இந்நிலையில் திங்கள் மாலை ஏழு மணிக்கு ஆளுநரைச் சந்தித்து  கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் தனது அரசு தோல்வியுறும் என்ற நிலையில், திங்கள் மாலை ஏழு மணிக்கு ஆளுநரைச் சந்திக்க முதல்வர் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் ஆளுநர் தரப்பில் உறுதியாக நேரம் ஒதுக்குவது குறித்து தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆளுநரைச் சந்தித்து குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வார் என்றும் சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com