சந்திரயான்-2  வெற்றி இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாள்: இஸ்ரோ தலைவர் சிவன் உரை

சந்திரயான்-2 விண்கலம் புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது இந்திய வரலாற்றில் முக்கியமான நாள் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
சந்திரயான்-2  வெற்றி இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாள்: இஸ்ரோ தலைவர் சிவன் உரை


ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-2 விண்கலம் புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது இந்திய வரலாற்றில் முக்கியமான நாள் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான்-2 விண்கலம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்தியா மட்டுமின்றி உலகமே காத்திருந்தது.

அடுத்த ஒன்றரை மாதங்கள் இஸ்ரோவுக்கு சிக்கலான மாதமாக இருக்கும். இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஒருங்கிணைந்த பணியால் மிகச் சவாலான பணியை செய்துள்ளோம். இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பினால்தான் இது சாத்தியமானது. மிகத் தீவிரமான பிரச்னையை கடைசி நேரத்தில் கண்டறிந்து சந்திரயான் - 2 விண்கலம் ஏவும் பணியை கடந்த வாரம் நிறுத்தினோம்.

நிலவின் தென் பகுதியில் நமது ஆய்வூர்தியை தரையிறங்குவதுதான் நமது அடுத்த இலக்கு. வெற்றியை சாத்தியமாக்கிய அனைவருக்கும் தலைவணங்குகிறேன். இதுவரை நிலவு குறித்து தெரியாத விஷயங்கள் கூட சந்திரயான் -2  மூலமாகத் தெரிய வரும்.

15 முக்கியமான பணிகளைத் தொடர்ந்து நிலவின் தென் துருவதில் ஆய்வுக்கலத்தை தரையிறங்குவதற்கான பணிகளை செய்வோம். சந்திரயான் -2 திட்டத்துக்காக விஞ்ஞானிகள், பொறியாளர் என எந்த வேற்றுமையும் இன்றி பணியாற்றினர் என்று சிவன் பெருமிதத்தோடு கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com