கங்கை உள்ளிட்ட 34 ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கு ரூ.5,800 கோடி நிதி: மத்திய அரசு ஒதுக்கீடு

கங்கை உள்ளிட்ட 34 ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கு ரூ.5,800 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
கங்கை உள்ளிட்ட 34 ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கு ரூ.5,800 கோடி நிதி: மத்திய அரசு ஒதுக்கீடு

கங்கை உள்ளிட்ட 34 ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கு ரூ.5,800 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பல்வேறு மாநிலங்களிடம் இருந்தும் மத்திய அரசுக்கு மாசு சுத்தப்படுத்துதல் பணிகள் தொடர்பான திட்டங்கள் குறித்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இதில் மாசுபட்ட ஆறுகளை சுத்தப்படுத்துதல் பணியும் அடங்கும். அவை அனைத்துக்கும் தேசிய நதி பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், தேசிய நதி பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், 16 மாநிலங்களில் 77 நகரங்களில் ஓடும் 34 ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கு ரூ.5870.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் தேசிய நதி பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், 9 மாநிலங்களுக்கு ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கு ரூ.143 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆறுகளில் ஓடும் நீரின் தூய்மைத் தன்மை குறித்து மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதுவரை 351 ஆறுகளில் மாசு ஏற்பட்டிருப்பது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் கண்டறியப்பட்டுள்ளது. ஏரிகள், நீர் சார் நிலப்பகுதிகளை பாதுகாப்பது குறித்த கேள்விக்கு பாபுல் சுப்ரியோ அளித்துள்ள பதிலில், "ஏரிகள், நீர்சார் நிலப்பகுதிகளில் மாசுவை கட்டுப்படுத்துவதற்கு 20 மாநிலங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.181 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com