வளர்ச்சிக்கான புதிய சகாப்தம் இனி தொடங்கும்: நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு எடியூரப்பா

வளர்ச்சிக்கான புதிய சகாப்தம் இனி தொடங்கும் என்று கர்நாடக மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா பேட்டியளித்துள்ளார். 
வளர்ச்சிக்கான புதிய சகாப்தம் இனி தொடங்கும்: நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு எடியூரப்பா


வளர்ச்சிக்கான புதிய சகாப்தம் இனி தொடங்கும் என்று கர்நாடக மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா பேட்டியளித்துள்ளார். 

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து, கர்நாடக பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

"இது ஜனநாயகத்தின் வெற்றி. குமாரசாமி அரசு மீது மக்கள் விரக்தியில் உள்ளனர். வளர்ச்சிக்கான புதிய சகாப்தம் இனி தொடங்கும் என்று கர்நாடக மக்களுக்கு உறுதியளிக்கிறேன். வரும் காலங்களில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். அதற்கான தகுந்த முடிவுகள் விரைவில் எடுக்கப்படும்" என்றார்.

பாஜக தலைவர் ஜெகதீஷ் ஷெட்டார் கூறுகையில், "காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்களின் ராஜிநாமாவை சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை. அதை ஏற்றுக்கொண்ட பிறகு தான், பாஜகவில் இணைய வேண்டுமா இல்லையா என்பது குறித்து அவர்கள் முடிவெடுக்க வேண்டும். தற்போதைய சூழலில், எங்களுக்கு 105 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். இது பாஜகவுக்கு பெரும்பான்மையாகும். நாங்கள் நிலையான ஆட்சியை நடத்துவோம்" என்றார்.

காங்கிரஸ் தலைவர் ஹெச்.கே. பாட்டீல் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு பேசுகையில், 

"நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் தோல்வியடைந்தது. எங்களுடைய எம்எல்ஏ-க்கள் துரோகம் இழைத்ததே தோல்விக்கு காரணம். கன்னடனாக ஒரு கட்சிக்கு இப்படி துரோகம் இழைத்ததை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com