ஆறு கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்: கர்நாடக முதல்வர் குமாரசாமி உருக்கம் 

கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கர்நாட க சட்டப்பேரவையில்  குமாரசாமி உருக்கமாகப் பேசினார்.
ஆறு கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்: கர்நாடக முதல்வர் குமாரசாமி உருக்கம் 

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கர்நாட க சட்டப்பேரவையில்  குமாரசாமி உருக்கமாகப் பேசினார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே கர்நாடக சட்டப்பேரவையில் செவ்வாயன்று நமபிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கர்நாட சட்டப்பேரவையில்  குமாரசாமி உருக்கமாகப் பேசினார்.

கர்நாடக சட்டப்பேரவையில் வியாழன் அன்று கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. செவ்வாய் மாலை வரைக்கு அதன் மீதான விவாதங்கள் நடைபெற்று வந்தது. தற்போது முதல்வர் குமாரசாமி அதன் மீது பேசிவருகிறார். அப்போது அவர் கூறியதாவது:

நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி. கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்; தவறுகளை சரிசெய்யும் நேரம் இது

காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி அமைந்த நாள் முதல் பாஜக குதிரை பேரத்தை தொடங்கியது. அரசியலுக்கு வர ஆசை இல்லை என்றாலும் காலத்தின் கட்டாயத்தினால் அரசியலுக்குள் நுழைந்தேன்.

ஊழல் செய்து பின்வாசல் வழியாக ஆட்சியமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. சட்டத்தில் விதி 10 குறித்தோ அல்லது வேறு சட்ட நுணுக்கம் குறித்தோ பேச விரும்பவில்லை. வாழ்க்கையில் நான் பல தவறுகளை செய்துள்ளேன்; பல நல்ல விஷயங்களையும் செய்துள்ளேன்

இவ்வாறு அவர் பேசிவருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com