இந்தியப் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டும்: நீதி ஆயோக் துணைத் தலைவர் நம்பிக்கை

இந்தியப் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டும்: நீதி ஆயோக் துணைத் தலைவர் நம்பிக்கை

வரும் 2020-21 நிதியாண்டு முதல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.


வரும் 2020-21 நிதியாண்டு முதல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
ஐ.நா. சபை சார்பில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற பொருளாதாரம், நிதி தொடர்பான கூட்டத்தில் ராஜீவ் குமார் பங்கேற்றார். இதில், நியூயார்க்கில் உள்ள அமெரிக்க தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய முதலீட்டு மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இப்போதைய இந்திய அரசு நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக முன்னெடுத்துள்ளது. இப்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது 2020-21 நிதியாண்டில் 8 சதவீதமாக அதிகரித்து, தொடர்ந்து அதே வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்பது எனது கருத்து.
எதிர்காலத்தில் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டும் சாத்தியமும் இந்தியாவுக்கு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. வேலையின்மை அதிகரிப்பு என்பது எல்லா நாடுகளிலும் ஒருபுறம் இருந்து கொண்டுதான் இருக்கும். 
இது பல்வேறு சமூகப் பிரச்னைகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்தியாவில் அப்படி எதுவும் நிகழவில்லை. 
ஏற்கெனவே 5 ஆண்டுகள் மத்தியில் இருந்த அரசு மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மக்கள் இந்த அரசின் மீது திருப்தியடைந்துள்ளனர் என்பது வெளிப்பட்டுள்ளது.
இந்தியாவில் இளைஞர்களுக்கு மேலும் தரமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது உண்மைதான். 
இதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com