சென்னையில் மாலை நேரத்தில் வழியை மறித்து கொட்டும் மழை

சென்னையில் இன்று மாலை 4.30 மணியளவில் மேகக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மகாக் கச்சேரியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
சென்னையில் மாலை நேரத்தில் வழியை மறித்து கொட்டும் மழை


சென்னை: சென்னையில் இன்று மாலை 4.30 மணியளவில் மேகக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மகாக் கச்சேரியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

சென்னையில் அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர், அரும்பாக்கம், அயப்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை, விருகம்பாக்கம், திருவேற்காடு, சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று காலை முதலே இதோ இன்னும் சற்று நேரத்தில் மழை பெய்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் சில இடங்களைத் தவிர்த்து, நாள் முழுக்க மழை பெய்யாமலேயே ஏமாற்றி விட்டது.

இன்று காலையிலேயே மழை பெய்யாது என்று தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு வானம் பள் இளித்தபடி நின்றிருக்க நேற்று கொண்டு வந்த குடையையும் ஒரு சிலர் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டனர்.

நேற்று பெய்யாமல் ஏமாற்றிய மழை, இன்றும் சென்னைவாசிகளை ஏமாற்றியது.

மணி ஐந்தானதா, வீட்டுக்குக் கிளம்பலாம் என்று அலுவலகம் அல்லது தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த சென்னைவாசிகள், கையில் குடையில்லாமல் கொட்டும் மழையை ரசிக்கவும் முடியாமல் கலங்கி நின்றார்கள்.

சில நிமிடங்களில் கொட்டித் தீர்த்த மழையால் சாலையில் ஓடும் நீருக்கு இடையே இன்று பலரும் சாலையை நீந்தியேக் கடக்க வேண்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com