Enable Javscript for better performance
அமர்நாத் யாத்திரை: 23-ஆவது குழு காஷ்மீருக்கு பயணம்- Dinamani

சுடச்சுட

    


    இமயமலையில் உள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க 2,700 யாத்ரீகர்கள் அடங்கிய புதிய குழு ஜம்முவில் இருந்து புதன்கிழமை புறப்பட்டது.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இமயமலை பகுதியில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இருக்கும் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கு ஆண்டுதோறும் யாத்ரீகர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 2.96 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர்.
    இந்நிலையில், அமர்நாத் யாத்திரைக்கான அடுத்த குழு ஜம்முவில் இருந்து புறப்பட்டது. இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    ஜம்முவின் பகவதி நகர் முகாமில் இருந்து 626 பெண்கள், 141 சாதுக்கள் உள்பட  2,700 பேர் அடங்கிய புதிய குழு 100 வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை அதிகாலை புறப்பட்டது. அவர்கள் பஹல்காம் மற்றும் பால்தால் ஆகிய இரு பாதைகள் வழியாக சென்று அனந்த்நாத் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் அடிவார முகாமையும், காந்தர்பல் மாவட்டத்தில் உள்ள பால்தால் அடிவார முகாமையும் அடைகிறார்கள். அங்கிருத்து பனிலிங்கத்தை தரிசிக்கச் செல்கின்றனர். 46 நாள்கள் நடைபெறும் இந்த புனித யாத்திரை வரும் 15-ம் தேதி நிறைவடைகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.
    பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு..: இதனிடையே, அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கச் சென்ற யாத்ரீகர்களில் 4 பேர், கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து பலியான அமர்நாத் யாத்ரீகர்களின் எண்ணிக்கை 30-ஆக அதிகரித்துள்ளது. கடல்மட்டத்திலிருந்து சுமார் 3, 888 மீட்டர் உயரத்தில் இந்த குகைக் கோயில் இருப்பதால், யாத்ரீகர்கள் அனைவரும் உடல் தகுதிக்கான மருத்துவச் சான்றிதழை சமர்ப்பித்த பின்னரே யாத்திரை மேற்கொள்ள வேண்டும். 
    எனினும் பல்வேறு காரணங்களினால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், அமர்நாத் குகைக்கு யாத்திரை மேற்கொண்டவர்களில் 4 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர். 
    யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 30 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் பணிக்கு சென்ற இரு பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இருவரும் இதில் அடங்குவர். ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழப்பு ஏற்படுகிறது  என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai