Enable Javscript for better performance
ஆக.15-ஆம் தேதி முதல் திருப்பதியில் பேட்டரி ஆட்டோக்கள்- Dinamani

சுடச்சுட

    


    திருப்பதியில் வரும் ஆக.15-ஆம் தேதி முதல் பேட்டரியால் இயங்கும் ஆட்டோக்களை இயக்க உள்ளதாக நகராட்சி ஆணையாளர் கிரீஷ் தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
    திருப்பதியில் தற்போது சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்த பேட்டரியால் இயங்கும் ஆட்டோக்களை இயக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர்களிடையே விவாதிக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைப்பு அளித்து பாட்டரி வாகனங்களை இயக்க முன்வரும் ஓட்டுநருக்கு சிறப்புச் சலுகைகளை அளிக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஆக.15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பேட்டரி ஆட்டோக்கள் இயக்கப்படும்.
     ஓட்டுநர்களுக்கு வசதியாக பல இடங்களில் பேட்டரி சார்ஜ் செய்யும் மையங்கள் அமைக்கப்படும். மேலும் சார்ஜ் குறைந்துவிட்டால் சார்ஜ் செய்யப்பட்ட பாட்டரிகளை ஓட்டுநர்கள் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளவும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தினமும் ரூ.250 கூடுதல் வருமானம் கிடைக்கும். தற்போது 15 முதல் 30 ஆட்டோக்கள் ஆக.15-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. விரைவில் இந்தாண்டு இறுதிக்குள் 300 ஆட்டோக்கள் இயக்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai