Enable Javscript for better performance
ஆந்திர பேரவைக்குள் நுழைவதற்கு 3 ஊடகங்களுக்கு தடை- Dinamani

சுடச்சுட

    


    ஆந்திர சட்டப்பேரவையின் விதிகளை மீறியதாகக் கூறி, பேரவைக்குள் நுழைவதற்கு 3 தொலைக்காட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது.
    பேரவை விதிகளை மீறி, ஆந்திரத்தின் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களான இடிவி, ஏபிஎன் ஆந்திர ஜோதி, டிவி-5 ஆகியவற்றில் சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலையாக காண்பித்ததாகக் கூறப்படுகிறது.
    இதுதொடர்பாக பேரவைத் தலைவர் தம்மினேனி சீதாராமிடம் அரசின் தலைமைக் கொறடா ஜி. ஸ்ரீகாந்த் ரெட்டி புகார் அளித்தார். 
    அதையடுத்து இதுகுறித்து சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் விளக்கம் அளிக்கும் வரையில் மேற்கண்ட 3 ஊடகங்களின் பிரதிநிதிகள் பேரவைக்குள் நுழைவதற்கு தடை விதிக்குமாறு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். 
    இந்தத் தடை உத்தரவுக்கான கடிதம், 3 தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் தனித்தனியே  அனுப்பப்பட்டுள்ளது என்று பேரவைச் செயலாளர் பாலகிருஷ்ணமாசார்யுலு தெரிவித்தார்.
    இந்த 3 தொலைக்காட்சி நிறுவனங்களும் முந்தைய தெலுங்கு தேசம் அரசின் ஆதரவு தொலைக்காட்சிகளாகக் கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai