Enable Javscript for better performance
உள்துறை செயலராகிறார் அஜய் பல்லா- Dinamani

சுடச்சுட

    
    ajaiballa


    மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு பணி அதிகாரியாக, மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், மத்திய மின்துறை செயலருமான அஜய் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மத்திய அரசின் அடுத்த உள்துறை செயலராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தற்போது உள்துறை செயலராக உள்ள ராஜீவ் கௌபா, ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில், கடந்த 1984-ஆம் ஆண்டு அஸ்ஸாம்-மேகாலயம் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய் பல்லாவை, உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு பணி அதிகாரியாக, பிரதமர் மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு புதன்கிழமை நியமித்தது. இவர்தான்அடுத்த உள்துறைச் செயலர் என்று அமைச்சரவையின் நியமன உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. அதேசமயம், சிறப்பு பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டு, பின்னர் உள்துறை செயலர் பொறுப்பை ஏற்பது வழக்கமான நடைமுறையாக உள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்டில் உள்துறை செயலராக அஜய் பல்லா பொறுப்பேற்றால், 2021, ஆகஸ்ட் வரை அப்பதவியில் நீடிப்பார்.
    பொருளாதார விவகாரங்கள் துறைக்கு புதிய செயலர்: மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் புதிய செயலராக, கடந்த 1985-ஆம் ஆண்டு குஜராத் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஏ. சக்ரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை வகித்து வந்த எஸ்.சி.கார்க் (1983ஆம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவு) மின்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார். இதேபோல், பல்வேறு துறைகளின் புதிய செயலர்களாக, 1986-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai