Enable Javscript for better performance
காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பாடம் புகட்ட சித்தராமையா திட்டம்- Dinamani

சுடச்சுட

  

  காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பாடம் புகட்ட சித்தராமையா திட்டம்

  By  பெங்களூரு,  |   Published on : 25th July 2019 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Siddaramaiah_EPS

  நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு பாடம் புகட்ட முன்னாள் முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளார்.
   அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தியின் விருப்பத்தின் பேரில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு அமைய முன்னாள் முதல்வர் சித்தராமையா சம்மதம் தெரிவித்திருந்தார். மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க சித்தராமையாவுக்கு விருப்பமில்லை என்றாலும், ராகுல் காந்தியின் எண்ணத்துக்கு மதிப்பளித்து முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடாவுடன் இணைந்துù சயல்பட்டார்.
   காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர் சித்தராமையாவால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதால், அவரையே சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ராகுல் காந்தி நியமித்திருந்தார். இதன்காரணமாகவே, கடந்த 14 மாதங்களில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக 6 முறை முயற்சித்த போதும், ஆட்சியை அசைத்து பார்க்க முடியாமல் காப்பாற்றப்பட்டது. இதில் சித்தராமையாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
   காங்கிரஸ் எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தி கூட்டணி ஆட்சி எவ்வித தடையில்லாமல் நடைபெற ஒத்துழைப்பு அளித்துவந்தார். ஆனால், மக்களவைத் தேர்தலில் மஜதவும், காங்கிரஸும் தலா ஒரு இடங்களில் மட்டும் வென்றதால், சித்தராமையாவின் தலைமை கேள்விக்குள்படுத்தப்பட்டது. அப்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சிலர் சித்தராமையாவின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி பாஜக பக்கம் சாய்ந்துகொண்டிருந்தனர்.
   இதற்கு காரணம், அதிருப்தி எம்எல்ஏக்கள் என்று அறியப்பட்ட ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிஹோளி, எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், பி.சி.பாட்டீல், சிவராம்ஹெப்பார், பிரதாப்கெளடாபாட்டீல், மகேஷ் குமட்டஹள்ளி, முனிரத்னா, கே.சுதாகர், எம்.டி.பி.நாகராஜ், நாகேந்திரா, ஸ்ரீமந்த்பாட்டீல், ரோஷன்பெய்க் ஆகியோர் அனைவரும் தனது ஆதரவாளர்கள் என்பதால், இவர்களை முழுமையாக நம்பினார் சித்தராமையா.
   சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆர்.சங்கர், எச்.நாகேஷ் ஆகிய இருவரையும் கூட்டணி அரசுக்கு ஆதரவளிக்க சம்மதிக்க வைத்ததோடு, அவர்களுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
   இந்த நிலையில், கூட்டணி அரசை கவிழ்க்க சித்தராமையாவின் ஆதரவாளர்களே துணைபோகிறார்கள் என்று அவரை ஊடகங்கள் விமர்சித்தன. இதனால், வேதனை அடைந்திருந்த சித்தராமையா, அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தி, மீண்டும் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு சில மணி நேரம் வரையிலும் முயற்சி மேற்கொண்டார்.
   ஆனால், சித்தராமையாவின் வார்த்தைக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் மதிப்பளிக்கவில்லை. இதனால் வேதனை அடைந்த சித்தராமையா, அதிருப்தி எம்எல்ஏக்களை மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதில்லை, இடைத் தேர்தல் நடந்தால் அவர்களை வெற்றிபெற விடுவதில்லை, கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவிநீக்கம் செய்யப்படும்வரை விடுவதில்லை என்று சட்டப்பேரவையில் பகிரங்கமாகவே அறிவித்தார்.
   தனது எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்ததை உணர்ந்திருந்த சித்தராமையா, நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு தோல்வி அடைந்தபிறகு, பெங்களூரில் உள்ள காவிரி இல்லத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தனது ஆதரவாளர்களுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.
   அப்போது, அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தகுந்தபாடம் புகட்ட வேண்டும். இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது.
   முதல்வராக இருந்தபோது எல்லா சலுகைகளையும் அனுபவித்துவிட்டு, நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு பாஜகவுக்கு துணைபோன அதிருப்தி எம்எல்ஏக்களையும் அரசியலில் மீண்டும் தலைதூக்கவிடாமல் தடுக்க வேண்டும் என்று சித்தராமையா கூறியிருக்கிறார்.
   இது காங்கிரஸில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai